என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காஸா வன்முறை
நீங்கள் தேடியது "காஸா வன்முறை"
இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த பீபா கால்பந்து பயிற்சி ஆட்டம் காஸா வன்முறையில் 123 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence
ஜெருசலேம்:
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. அந்த வகையில் வருகிற 9-ம் தேதி இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ஜெருசலேம் நகரில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி விளையாடுவதற்கு பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அப்படி அர்ஜெண்டினா அணி ஜெருசலேம் நகரில் கால்பந்து விளையாடினால் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் ஜெர்சி மற்றும் படத்திற்கு தீவைக்குமாறு பாலஸ்தீன அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து, இஸ்ரேல் உடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்வதாக அர்ஜெண்டினா அறிவித்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 123 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence
காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #USEmbassyJerusalem #Gaza #Macron
பாரிஸ்:
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார். அவரது அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையே, கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியதால், இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 37 பேர் பலியாகினர்.
இந்நிலையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #USEmbassyJerusalem #Gaza #Macron
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X